ஷா ஆலம், ஏப்ரல் 11:
சமூக வலைதளங்களில் ஷா ஆலம் செக்சன் 6-இல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
" ஷா ஆலம் செக்சன் 6 பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என வதந்திகள் பரவியது. இந்த செய்தியில் எந்த அடிப்படையும் இல்லை. இது பொய்யான தகவல் ஆகும்," என்று தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.
இந்த வேளையில், பெட்டாலிங் மாவட்ட அலுவலகம் மற்றும் சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவுடன் இணைந்து கோவிட்-19 நோய் பரவலை தடுக்க வீடு வீடாக பரிசோதனை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமிருடின் ஷாரி கூறினார்.


