புத்ராஜெயா , ஏப்ரல் 11:
சிகிச்சை பெற்று வரும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) இரண்டாம் கட்டம் ஏப்ரல் 14-இல் முடியும் பொழுது குறைந்து விடும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று 2,462-ஆக இருக்கும் எண்ணிக்கை அடுத்த வாரம் 2,033-ஆக குறையும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை காட்டுகிறது.
" இது பிகேபி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் வெற்றியாக கருதுகிறேன். பிகேபி நடவடிக்கை கோவிட்-19 சம்பவங்களை குறைத்துள்ளது," என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.


