NATIONAL

70% சிலாங்கூரின் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்ததிற்கு ஆண்டவனுக்கு நன்றி - மந்திரி பெசார்

10 ஏப்ரல் 2020, 1:51 PM
70% சிலாங்கூரின் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்ததிற்கு ஆண்டவனுக்கு நன்றி - மந்திரி பெசார்

ஷா ஆலம், ஏப்ரல் 10:

சிலாங்கூர் மாநிலத்தில் 73.25 சதவீதம் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து விட்டதற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்வதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

" ஆண்டவன் ஆசிர்வாதத்தில் இன்று வரை சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,118 கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 819 நோயாளிகள் குணமடைந்து விட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று மந்திரி பெசார் தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்த வேளையில், இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பொது மக்கள் தொடர்ந்து நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் இதன் வழி வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.