NATIONAL

பிகேபி காலத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதற்கு கட்டொழுங்கு அவசியம்!

9 ஏப்ரல் 2020, 1:54 AM
பிகேபி காலத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதற்கு கட்டொழுங்கு அவசியம்!

கோலாலம்பூர், ஏப்.9-

நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை (பிகேபி) பிரகடணப்படுத்தி இரண்டாம் கட்டத்தி; நாம் இருக்கும் வேளையில், தொழிலாளர் தரப்பினர் அதன் கடுமையான தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். நடமாட்ட கட்டுப்பாடு என்பது இலவச விடுமுறை அல்ல. மாறாக, வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய வேண்டும். ஆனால், இது அவ்வளவு எளிதானதல்ல.

பல தொழிலாளர்கள் இந்நேரத்தில் தொழிலாளர் தாய், மகள், கணவர் என்று பல்வேறு தொப்பிகள் அணிந்து கடமையாற்றுகின்றனர். அலுவலக பணியோடு வீட்டு வேலைகளையும் நிர்வகிப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை.

வீட்டில் இருந்து பணி புரிய பணிக்கப்பட்டுள்ள அரசாங்கப் பணியாளர்களுக்கு அரசாங்க தலைமை செயலாளர் டத்தோ முகமது கைருள் 3 நிபந்தனைகளை விதித்துள்ளார்.

முதலாவது எந்நேரமும் வீட்டில் இருக்க வேண்டும். இரண்டாவது இலாகா தலைமையில் இருந்து புதிய உத்தரவு கிடைத்தவுடன் அலிவலகத்திற்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். மூன்றாவது, வேலை நேரத்தில் மேலதிகாரிகள் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடியதை உறுதி செய்ய வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.