NATIONAL

இன்றைய நிலவரப்படி புதிய பாதிப்புகள் 217-ஆக பதிவாகியுள்ளன; இதுவரை மொத்தம் 3,333 பாதிப்புகள்

3 ஏப்ரல் 2020, 1:32 PM
இன்றைய நிலவரப்படி புதிய பாதிப்புகள் 217-ஆக பதிவாகியுள்ளன; இதுவரை மொத்தம் 3,333 பாதிப்புகள்

புத்ராஜெயா, ஏப்ரல் 3:

கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பான மேலும் மூன்று இறப்புகளை மலேசியா பதிவு செய்துள்ளது. இதனால், மலேசியாவில் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி புதிய பாதிப்புகள் 217-ஆக பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தம் 3,333 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று, 60 நோயாளிகள் குணமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். மொத்தமாக குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 827 பேர் ஆவர் என்று கூறியுள்ளார்.

நூர் ஹிஷாமின் கூற்றுப்படி, இன்று அறிவிக்கப்பட்ட 217 புதிய பாதிப்புகளில், 58 பாதிப்புகள் ஸ்ரீ பெட்டாலிங் தப்லீக் கூட்டத்துடன் தொடர்புடையவை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.