NATIONAL

தேசிய பரிவுமிக்க உதவி குறித்து குறுந்தகவல் வழியாக கேட்காது! - வருமான வரி வாரியம் மறுப்பு .

3 ஏப்ரல் 2020, 2:25 AM
தேசிய பரிவுமிக்க உதவி குறித்து  குறுந்தகவல் வழியாக கேட்காது! - வருமான வரி வாரியம் மறுப்பு .

ஷா ஆலம், ஏப்.3-

தேசிய பரிவுமிக்க உதவி குறித்து தனிநபர்களின் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் போன்றவற்றை குறுந்தகவல் வழியாக தமது தரப்பு கேட்டத்தில்லை என்று வருமான வரி வாரியம் (எல்எச்டிஎன்) கூறியது.

இத்தகவலை தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் உடனடி பதில் தெரிவிக்கும் குழு உறுதிப்பட்டுத்தியது.

இதனிடையே, தனது தரப்பிடம் இருந்து குறுந்தகவல் அல்லது மின் அஞ்சல் வழியாக தகவல் பெறும் விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியை சரிப்பார்க்கத் தேவையில்லை என்று எல்எச்டிஎன் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

நடமாட்ட கட்டுப்பாடு காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக கடந்த மார்ச் 27ஆம் தேதி பரிவுமிக்க பொருளாதார உதவி திட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.