ஷா ஆலம், ஏப்.1-
சிவப்பு வட்டாரங்கள் என சிலாங்கூரில் வகைப்படுத்தப்பட்ட 4 வட்டாரங்களில் நேற்று மேலும் 24 புதிய நோயாளிகள் உறுதி செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட 4 வட்டாரங்களில் இதுவரை மொத்தம் 635 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உகு லாங்காட்( 265), பெட்டாலிங் (234), கிள்ளான் (74) மற்றும் கோம்பாக் (62) சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் டுவீட்டர் தகவல் தரவு தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர் கோவிட் 10 தொற்று பரவலில் இருந்து தங்களைப் பாதுகாக்க நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பின் பற்றி கைகளை சபர்க்காரம் கொண்டு சுத்தம் செய்வது, வீட்டிலேயே இருப்பது மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது அபசியமாகும் என்று அமைச்சு கூறியது. உலு லாங்காட்டில் உள்ள சுங்கை லூயில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை கடந்த மார்ச் 30 தொடங்கி அமலில் இருப்பதை அது நினைவுறுத்தியது.


