புத்ராஜெயா, ஏப்ரல் 1:
எதிர் வரும் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நடமாடும் கட்டுபாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் உற்பத்தி, மொத்த வியாபாரம், கிடங்கு சேவை, சில்லறை வணிகம் மற்றும் இணைய வணிகம் ஆகிய வணிகங்களை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று உள்நாட்டு வணிகம் மற்றும் பயனீட்டாளர் நல அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனாலும், பிகேபி காலகட்டத்தில் தேசிய பாதுகாப்பு மன்றம், மாநில அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் இணைந்து நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது என விளக்கம் தந்துள்ளது.
" இந்த துறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிகேபி காலகட்டத்தில் அரசாங்க நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சு எதிர் பார்க்கிறது. மேற்கண்ட நிறுவனங்கள் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது," என்று அமைச்சர் டத்தோ அலேக்ஸாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.


