ஷா ஆலம், மார்ச் 31-
இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் சிலாங்கூர் அனைத்துலக வர்த்த உச்ச நிலை மாநாட்டை (எஸ்ஐபிஎஸ்) நடத்துவதா இல்லையா என்ற முடிவு ஜூன் மாதத்தில் எடுக்கப்படும் என்று முதலீட்டு துறை ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார். கோவிட்-19 பரவல் காரணமாக அனைத்துல நிகழ்ச்சிகளை ஒத்துவைப்பது குறித்து நடப்புச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முடிவெடுக்கும் என்று அவர் சொன்னார்.
உதாரணமாக ஏப்ரல் முதல் நாள் தொடங்கி 4ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிட்டப்பட்டிருந்த மலேசிய அனைத்துல ஹலால் கண்காடிச் (மிஹாஸ்) செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். எனவே பல அம்சங்களை கருத்தில் கொண்டே எஸ்ஐபிஎஸ் மிஹாஸ் கண்காட்சிக்குப் பின்னர் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுவது பற்றி முடிவெடுக்கப்படுவதற்கு முன்னர் நிகழ்ச்சி விளம்பர பணியும் கருத்தில் கொள்வது அவசியமாகும் என்று தெங் குறிப்பிட்டார்.


