NATIONAL

உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் ‘ஹாசில் கேர் லைன்’ தொலைப்பேசி சேவை மீண்டும் தொடங்கியது

30 மார்ச் 2020, 4:33 AM
உள்நாட்டு வருமான வரி வாரியத்தின்  ‘ஹாசில் கேர் லைன்’ தொலைப்பேசி சேவை மீண்டும் தொடங்கியது

ஷா ஆலம், மார்ச் 30-

தேசிய மக்கள் நல பொருளாதார (பிரிஹாத்தின் ) உதவித் திட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் ‘ஹாசில் கேர் லைன்’ (எச்சிஎல்) என்ற தொலைப்பேசி சேவைப் பிரிவு மீண்டும் செயல்படுத்தப் பட்டுள்ளது. இந்த சேவை நடமாட்ட கட்டுப்பாடு நீடிக்கும் வரை ஞாயிறு மதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை வழங்கப்படும் என்று வாரியத்தின் தொடர்பு பிரிவு தெரிவித்தது.

எனினும், நாடு முழுவதிலும் உள்ள வாரியத்தின் இதர அலுவலங்கள் அனைத்தும் நடமாட்ட கட்டுப்பாடு நிறைவு பெறும் வரை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன என்றும் அது கூறியது. பிபிஎன் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் 03- 8911 1000 அல்லது +603-8911 1100 (வெளிநாட்டில் உள்ளோர்) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அது தவிர்த்து, வாழ்க்கைச் செலவின உதவித் திட்டம் (பிஎஸ்எச்) குறித்த ஐயப்பாடுகளுக்கு 1800-88-2747 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.