PBT

2,077 வாடகை கடைகளையும் ஏப்ரல் 14 வரை மூடுவீர்! - எம்பிஎஸ் உத்தரவு

27 மார்ச் 2020, 1:14 AM
2,077 வாடகை கடைகளையும் ஏப்ரல் 14 வரை மூடுவீர்! - எம்பிஎஸ் உத்தரவு

ஷா ஆலம், மார்ச் 27-

தனது மாவட்டத்தில் உள்ள அனைத்து 2,077 வாடகை கடைகளும் ஏப்ரல் 14ஆம் தேதி கோவிட் 19 நடமாட்ட கட்டுப்பாடு ஆணை நடைமுறையில் இருக்கும் வரை மூடப்பட வேண்டும் என்று செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) உத்தரவிட்டுள்ளது.

இது நடப்பில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு காலத்தை ஏற்பல் 14 வரையில் அன்மையில் நீட்டித்த பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசினின் முடிவிற்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும் என்று எம்பிஎஸ் தலைவர் ஷம்சுல் ஷாஹ்ரில் பட்லிஸா முகமது நூர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ஏப்ரல் மாத வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

இது குறித்து மேல் விபரம் அறிய விரும்புவோர் எம்பிஎஸ் சிறப்பு நடவடிக்கை அறையுடன் 03-6138 9898 அல்லது 1-800-2220677 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொள்ளலா,

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.