NATIONAL

மேலும் 7 கேகேஎம் பணியாளர்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதி

26 மார்ச் 2020, 4:39 AM
மேலும் 7 கேகேஎம் பணியாளர்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதி

ஷா ஆலம், மார்ச் 26-

இன்று காலை வரையில் மேலும் 7 மருத்துவத் துறை (கேகேஎம்) பணியாளர்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக மலேசிய சுகாதா அமைச்சு தெரிவித்தது. இந்த எண்ணிக்கையோடு இதுவரை இந்தத் தொற்று நோய் கண்ட மருத்துவப் பணியாளர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 80 என்று சுகாதாத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா கூறினார்.

இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இத்தொற்று பரவவில்லை என்றார் அவர்.

அனைத்து மருத்துவத் துறை பணியாளர்கள் மற்றும் முன் வரிசையினரும் எப்போதும் கைகளைச் சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, பாதுகாப்பு சாதனங்கள் அணிவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.

இதுவரை இந்தத் தொற்று கண்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்களில் 73 பேருக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததினான் நோய் ஏற்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.