ஷா ஆலம், மார்ச் 25-
இங்குள்ள 4 மாவட்டங்களில் கோவிட்-19 பரவல் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெட்டாலிங் மாவட்டத்தில் 158, உலு லங்காட்டில் 103, கோம்பாக்கில் 50 மற்றும் கிள்ளானில் 28 பேருக்கு இந்தத் தொற்று பரவியுள்ளது என்று தலைமை சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அதே வேளையில், கோல சிலாங்கூரில் 17 பேர், சிப்பாங்கில் 9 பேர் , கோலா லாங்காட்டில் 8 பேர் மற்றும் உலு சிலாங்கூரில் 5 பேர் இந்நோயினால் பாதிப்புற்றுள்ளதாக அவர் சொன்னார்.
நாட்டில் கோவிட்-19 தொற்று கண்டவர்கள் பட்டியலில் 167 பேருடன் லெம்பா பந்தாய் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் சிரம்பானில் 74 பேர், ஜோகூர் பாருவில் 59 பேர், தித்திவங்சாவில் 46 பேர் மற்றும் கோத்தா பாருவில் 43 பேர் இந்தத் தொற்று நோய் கண்டுள்ளனர் என்றார் அவர்.
இதனிடையே கிந்தாவில் 34 பேருக்கும் கெப்போங்கில் 32 பேருக்கும் ஹிலிர் பேராக்கில் 32 பேருக்கும் குளுவாங்கில் 31 பேருக்கும் பத்து பகாட்டில் 28 பேருக்கும் கோல மூடாவில் 27 பேருக்கும் மற்றும் செப்ராங் பிறையில் 22 பேருக்கும் இந்நோய் கண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளைப் பதிவு செய்த பகுதிகளாக தாவாவ் (49), கூச்சிங் (44), லகாட் டத்து (34) மற்றும் கோத்தா கினபாலு (24) ஆகியவை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.


