ஷா ஆலம், மார்ச் 24:
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், ஏழாவது நாளாக தொடரும் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் இருக்கும் சில தரப்பினரை செயலைக் கண்டு கவலை தெரிவித்தார். சுல்தான் சராபூஃடின் இட்ரீஸ் ஷா, கோவிட்-19 நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திய பிகேபியை பொது மக்கள் மதிக்க வேண்டும் என்றும் சட்டத்தை மீறக்கூடாது என மக்களுக்கு கட்டளை இட்டார்.
" பிடிவாதம் மற்றும் சுயநலம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் முன் வரிசை பணியாளர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆகவே, பொது மக்கள் வீடுகளில் அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். கோவிட்-19 நோய் இருக்கும் அறிகுறி தென்பட்டால் தானாக முன்வந்து சிகிச்சை பெற வேண்டும்," என்று தமது சிலாங்கூர் ரோயல் ஓப்பீஸ் அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு முன்பாக, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியை ஷா ஆலம் புக்கிட் காயாங்கான் அரண்மனையில் சந்தித்தார்.


