ஷா ஆலம், மார்ச் 24:
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று பதிவு செய்யப்பட்டுள்ள கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்த நிலையில் 106 மட்டுமே என்று மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஸ்ரீ பெட்டாலிங் மஸ்ஜித் ஜாமேக் சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 43 பேர்கள் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார்.
" மீதமுள்ள 63 நோயாளிகள் மற்ற காரணங்கள் ஆகும். நோய்களின் மூல காரணங்களை விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை, 64 நோயாளிகள் பிரத்யேக சிகிச்சை பிரிவிலும் (ஐசியு) அதில் 27 நோயாளிகள் சுவாசிக்க உதவி இயந்திரம் தேவைப்படுகிறது," என்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் பேசினார்.


