ஷா ஆலம், மார்ச் 24-
தனித்து வாழும் மூத்த குடிமக்களுக்கு சில்லரை பொருட்களை இலவசமாக அனுப்பும் சேவையில் சுபாங் ஜெயா சட்டமன்ற தொகுதி அலுவலகம் ஈடுபட்டுள்ளது. நடமாட்ட கட்டுப்பாடு பிரகடணப்பட்ட பின்னர் கடந்த ஏழு நாட்களாக வழங்கப்பட்டு வரும் இச்சேவைக்கு நல்ல வரவேற்கு கிடைத்து வருவதாக சட்டமன்ற உறுப்பினர் மிஷேல் இங் மெய் ஸீ கூறினார்.
மூத்த குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களுக்கான பொருட்களை காலை மணி 10 மணி தொடங்கி மாலை மணிக்குள் தன்னார்வலர்கள் அனுப்பிவைக்கின்றனர் என்றார் அவர். பொருட்களை அனுப்பும் போது சம்பந்தப்பட்ட தன்னார்வ சேவையாளர்கள் சமூக இடைவெளி தூரத்தை பின்பற்று வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
இந்தச் சேவையை வழங்குவதற்கு முன்னர், சுபாங் ஜெயா தொகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட தனித்து வாழும் மூத்த குடிமக்களின் முகவரி அடையாளம் காண்ப்படும் என்றார். பொருட்களை ஆர்டர் செய்யும் மூத்த குடிமக்கள் அவற்றிக்கான சரியான தொகையை தயார் செய்து வைத்திருப்பதோடு வழங்கப்படும் பொருட்கள் கொள்முதல் ரசீதுகளை சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்,


