RENCANA PILIHAN

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 7 திட்டங்கள் ரிம 126.78 மில்லியன் ஒதுக்கீடு - மந்திரி பெசார்

20 மார்ச் 2020, 2:27 AM
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 7 திட்டங்கள் ரிம 126.78 மில்லியன் ஒதுக்கீடு - மந்திரி பெசார்

ஷா ஆலம், மார்ச், 20-

கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு பரிவுமிக்க 7 உதவித் திட்டங்களை மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சம்பந்தட்ட அதிகாரிகள், பணியாளர்கள், பட்டப்படிப்பு மாணவர்கள், வர்த்தகர்கள், அங்காடி கடைகாரர்கள், ஹிஜ்ரா தொழில்முனைவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் 7 உதவித் திட்டங்களுக்காக 127.78 மிலியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்,

கடந்த புதன்கிழமை தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கும் நடமாட்ட கட்டுபாட்டு நடவடிக்கையால் மக்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டுள்ளது என்று இங்கு நடைபெற்ற செய்துடாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

அறிவிக்கப்பட்டுள்ள் உதவித் திட்டங்கள் பின் வருமாறு:

1. சிலாங்கூர் மருத்துவமனையில் பணிபுரியும் 6,000 பணியாளர்களுக்கு தலா ரிம.200

2. மொத்தம் 80,000 அங்காடி கடைகாரர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஒரு மாத வாடகை சலுகையோடு ரிம 500 உதவித் தொகை

3. ஹிஜ்ரா உதவி பெற்ற தொழில்முனைவர்களுக்கு 3 மாத தவணைக் கட்டணங்கள் செலுத்துவதில் இருந்து விலக்கு

4. சபா மற்றும் சரவாக்கில் பயிலும் 2,500 அனாக் சிலாங்கூர் மாணவர்களுக்கு தலா 200 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் வேளையில் யுனிசெல், குவிஸ் மற்றும் இன்பென் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் வீட்டிற்குத் திரும்பாத மாணவர்களுக்கு மார்ச் 22 தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும்.

5. விவேக வாடகை திட்டத்தில் குடியிருக்கும் 2,700 பேருக்கு மூன்று மாத வாடகை ஒத்திவைப்பு

6. கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடாக ரிம30,000.

7. நில வரி மற்றும் வாணிப இடங்களுக்கு ஒரு மாத வரி சலுகை

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.