NATIONAL

மைசலாம் திட்டத்தின் பயனை மக்கள் அறியத் தொடங்கியுள்ளனர்

20 பிப்ரவரி 2020, 3:12 AM
மைசலாம் திட்டத்தின் பயனை மக்கள் அறியத் தொடங்கியுள்ளனர்

ஈப்போ, பிப்.20-

சமுதாய பாதுகாப்புத் திட்டமான மை சலாம் திட்டம் குறித்து அரசாங்கம் தொடர்ந்து செய்து வந்த பிரச்சாரத்தின் பயனாக மக்கள் தற்போது இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை பெற்றுள்ளனர்.

இது குறித்து கருத்துரைத்த ஜாவியா தோமின் (வயது 53), தாம் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் நீரிழிவு நோயினால் தமது காலின் முட்டிப் பகுதி கடந்தாண்டு துண்டிக்கப்பட்டதற்காக சிகிச்சை பெற்ற போது இத்திட்டம் பற்றி அறிந்ததாகக் கூறினார்.

அந்நோயின் தீவிரம் காரணமாக இவ்வாண்டு மற்றொரு காலின் பகுதியும் துண்டிக்கப்பட்டதாக என்று 4 குழந்தைகளின் தாயாரான அவர் சொன்னார்.

அச்சமயம் மை சலாம் திட்டத்தினால் பயனடைந்தவர்களை சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டிய்தாக ஜாவியா தெரிவித்தார்.

தனது கால்களை இழந்துள்ள இம்மாதுவிற்கு 8,000 ரிங்கிட் பெறத் தகுதி உள்ளது குறித்தும் மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் ஒவ்வொரு நாளுக்கும் ரிம50 கோரும் வாய்ப்பும் குறித்தும் அவருக்குத் தெரிய வந்துள்ளது.

தனது இல்லத்தில் இருந்து மருத்துவமனை 60 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், தன்னை காண வரும் மகளின் போக்குவரத்துச் செலவிற்கு இந்தத் தொகை மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.