பத்துமலை, பிப்ரவரி 8:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் 30 ஆலயங்களுக்கு ரிம 315,000-ஐ வழங்கியது என மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்திய சமுதாயத்திற்கு இந்நிதியின் வழி ஆலயங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல் படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
" கடந்த 2008-இல் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் சமய நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்த முடிகிறது. மேலும், பல ஆலயங்களுக்கு நிலப்பட்டா வழங்கப் பட்டன. சிலாங்கூர் மாநில அரசாங்கம் இதன் வழி இந்துக்கள் தங்களது சமய நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி செய்ய முடிகிறது," என்று பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்திற்கு முன்பு நடைபெற்ற சிலாங்கூர் மாநில தைப்பூச கொண்டாட்டத்தில் இவ்வாறு அமிருடின் கூறினார்.
[caption id="attachment_383524" align="aligncenter" width="671"]
Dato' Seri Amirudin Shari berucap ketika sambutan Thaipusam peringkat Selangor di Kuil Sri Subramaniar, Batu Caves pada 7 Februari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI[/caption]


