PBT

ஞாயிறன்று எம்பிஎஸ்ஏ ஏற்பாட்டில் உள்நாட்டு பழவகைகளை இலவசமாக உண்டு மகிழலாம்!

6 பிப்ரவரி 2020, 4:53 AM
ஞாயிறன்று எம்பிஎஸ்ஏ ஏற்பாட்டில் உள்நாட்டு பழவகைகளை இலவசமாக உண்டு மகிழலாம்!

ஷா ஆலம், பிப்.6-

இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி அணுசரிக்கப்படும் வாகனமில்லா தினம மற்றும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு உள்நாட்டு பழ வகைகளை இலவசமாக உண்டு மகிழ பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்.

தனது தரப்பு சரவாக் ரம்புத்தான், பால் மாங்காய், கொய்யா பழம்,, அன்னாடி மற்றும் இளநீர் போன்றவற்றை 1,200 கிலோ கிராம் ஏற்பாடு செய்திருப்பதாக ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் (எம்பிஎஸ்ஏ) நிறுவனப் பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார். அதே வேளையில், நடமாடும் ஷா ஆலம் அலுவலகச் சேவை, நடமாடும் நூலகம் மற்றும் மரம், உரம் விற்பனை போன்றவற்றையும் எம்பிஎஸ்ஏ ஏற்பாடு செய்திருப்பதாக அவர் சொன்னார்.

இவற்றுடன் கடல் நாக நடனம், மருத்துவ பரிசோதனை, சுவர் ஏறுதல், பசுமைக்கு முக்கியத்துவம் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பெர்சியாரான் பண்டார் ராயா (மெடேக்கா சதுக்கம்), பெர்சியாரான் தாசேக், பெர்சியாரான் மஸ்ஜிட், பெர்சியாரான் டத்தோ மெந்திரி மற்றும் பெர்சியாரான் டாமாய் ஆகிய சாலைகள் காலை 6.30 மணி தொடங்கி 9.30 மணி வரை மூடப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.