புத்ராஜெயா, பிப்.3-
இவ்வாண்டு ஜூலை மாதம் தொடங்கி அடையாளப் பத்திரம், பிறப்பு சான்றிதழ் மற்றும் திருமணப் பதிவுகளை இணையம் வழி விண்ணப்பிக்க வகை செய்யும் நடைமுறையை தேசிய பதிவிலாகா (ஜேபிஎன்) அமல்படுத்தவிருக்கிறது.
“இந்நடைமுறை வழி வாடிக்கையாளர்களின் நேரம் மீதப்படுத்தப்படும், ஆயினும், புதிய ஆவணங்களைப் பெறுவதற்காக ஜேபிஎன் அலுவலகத்திற்கு அசல் ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று இதன் இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.
“நாட்டின் பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்படுவதையும் முறைகேடுகளையும் தடுக்க, விண்ணப்பதாரர் அசல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம்” என்றார் அவர்.
“இந்த நடைமுறை பரீட்சார்ந்த முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் இவ்வாண்டு மத்தியில் அமல்படுத்தக் கூடும்” என்றும் அவர் சொன்னார். தற்போது தேசிய பதிவலாகாவில் மொத்தம் 23,064,172 மை கார்டு அட்டைகள் மற்றும் 5,737,215 மை கிட் அட்டைகள் பதிந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார்.


