புத்ராஜெயா, ஜன.30-
தேசிய பண்பாட்டு பொங்கல் விழாவை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பத்துமலையில் தொடக்கி வைக்கிறார். தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை (பிரதமர் துறை), சுற்றுலாத் துறை ஆகிய அமைச்சுகளின் இணை ஏற்பாட்டிலும் தேசிய இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பிலும் நடைபெற உள்ள இந்தத் தேசியப் பொங்கல் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2-ஆம் நாள் பத்துமலை, தேசிய சீன தொடக்கப்பள்ளியில் (கியோ பின்) காலை 8:00 முதல் நண்பகல் வரை நடைபெற உள்ளது.
பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தொடக்கி வைக்கவுள்ள இந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் கலை-பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ முகமட் கெத்தாப்பியும் கலந்து கொள்ள உள்ளார்.



