ஷா ஆலம், ஜன.30-
வாகனம் ஓட்டும் உரிமத்திற்கு விண்ணப்பிப்போரின் சிறு நீரை அரசாங்கம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹாலிமி அபு பக்கார் கேட்டுக் கொண்டார்.
“இதன் வழி மது மற்றும் போதைப் பொருளைப் பயன்படுத்துவோர் வாகனமோட்டும் உரிமத்தைப் பெறும் தகுதியை இழப்பர்” என்று அவர் சொன்னார்.
“எனவே, முதல் கட்டமாக சிறு நீர் பரிசோதனையை நடத்த வேண்டும். அச்சோதனை வழி போதைப் பித்தர்கள் மற்றும் மது அருந்துவோரும் சம்பந்தப்பட்ட உரிமம் பெறுவது தடுக்கப்படும். ஏனெனில். இத்தரப்பினர் சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பிற்கு மிரட்டலாக உள்ளனர்” என்று அவர் விவரித்தார்.
மது மட்டும் போதை பொருள் பயன்படுத்தியுள்ளதாக கண்டறியப்படும் வாகனமோட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போக்குவரத்து அமைச்சின் அறிக்கையை வரவேற்றதோடு இது உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நடப்பில் உள்ள தண்டனை கடுமையாக இல்லாததால், இந்த பரிந்துரையை நான் வரவேற்கிறேன். மேலும் இது அனைவருக்கும் ஒரு பாடமாகவும் அமையும்” என்றார் அவர்.


