ஷா ஆலம், ஜன.30-
சிலாங்கூரில் நல்லிணக்கமிக்க குடும்பங்களைத் தோற்றுவிக்க, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகளை மகளிர் மேம்பாட்டு கழகம் (ஐடபள்யூபி) தொடர்ந்து அமல்படுத்தி வருவதாக அதன் தலைவர் ஜூவைரியா ஜுல்கிப்ளி கூறினார்.
இளம் தம்பதிகள் மற்றும் ஆக்கப்பூர்வமான தொடர்பு முறைகள் மீது இந்த நிகழ்ச்சிகள் கவனம் செலுத்தி வருவதாஅக அவர் சொன்னார்.
“அவைத் தவிர்த்து, பூர்வ குடிமக்கள், பெல்டா குடியேற்றக் காரர்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் மீது கவனம் செலுத்தும் நிகழ்ச்சிகளையும் இக்கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது” என்றார் அவர்.
“நாட்டில் உள்ள 6.2 மில்லியன் மகளிர் ‘அழுத்தமிக்க குடும்பமாக’ வகைப் படுத்தப்பட்டுள்ளதால், குடும்ப நல்லிணக்க விவகாரத்தின் மீது அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியமாகும்” என்று அவர் வலியுறுத்தினார்.
இக்கழகம் தற்போது இந்த விவகாரங்களுக்கான தீர்வு மற்றும் கொள்கையை அடையாளம் காண்பது குறித்த ஆய்வு நடத்தி வருவதாகவும் மாநில அரசாங்கத்தின் நீண்ட கால நடவடிக்கை திட்டத்திற்கு இது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


