ஷா ஆலம், ஜன.29-
நச்சுக்கிருமி பரவலைத் தவிர்க்க வீடமைப்புப் பகுதிகளின் தூய்மையை ஒன்றிணைந்து நிர்வாகக் கழகம் (ஜேஎம்பி) மற்றும் நிர்வாகக் கழகம் (எம்சி) கண்காணிக்க வேண்டும் என்று கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் பணித்தது. இம்மன்றங்களின் நடவடிக்கைக்கு அனைவரின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து சமூகத்தினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மன்றத்தில் தலைவர் ராஹிலா ரஹ்மாட் கூறினார்.
“ஒன்றிணைந்த சமூகம் என்ற அடிப்படையில் ஜேஎம்பி மற்றும் எம்சி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கட்டடங்களைப் பராமரிப்பது மற்றும் கணக்குகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவதன் வாயிலாக உதவி வழங்குவது அவசியமாகும்” என்றார்.
“இந்த ஒத்துழைப்பு தொடர்ந்தால், ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாகும்” என்று ஜேஎம்பி/ எம்சி அங்கீகார நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.
இத்தரப்பினரின் சேவைகளை மதிப்பீடு செய்து முதல் முறையாக வழங்கப்படும் இந்த அங்கீகாரமானது அவர்களின் சேவை தரத்தை மேம்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


