NATIONAL

இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு தீவிரம்!

27 ஜனவரி 2020, 3:28 AM
இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு தீவிரம்!

புத்ராஜெயா, ஜன.27-

நாட்டின் பொருளாதாரத்தை இவ்வாண்டு துரிதப்படுத்த அரசாங்கம் இலகவிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் தீவிரமாக உள்ளது. மனித வள மேம்பாடு மற்றும் ஆய்வுகள் யாவும் முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு இலக்கவியல் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

“ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி செல்வதற்கு ஏதுவாக மக்கள் இலக்கவியல் கலாச்சாரத்தை அமல்படுத்துவதோடு இலக்கவியல் வர்த்தகத்தில் பங்கெடுக்க வேண்டியது அவசியமாகும். அதன் மூலமாகத்தான் இலக்கவியல் பொருளாதாரத்திற்கு மாறும் மலேசியாவின் கனவு நினைவாகும்” என்றார் அவர்.

“இந்த இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றான மக்கள் மின் ரொக்க திட்டத்திற்காக அரசு 450 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. மக்கள் மத்தியில் மின் பணப்பை நடைமுறை அமல்படுத்த இத்திட்டம் உதவும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ரொக்கமற்ற முறையில் கட்டணம் செலுத்தும் நடைமுறையானது மேலும் ஆக்கப்பூர்வ பயனளிப்பதோடு வரி தவிர்ப்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கையை குறைக்கும்” என்று நிதியமைச்சு பணியாளர்களுக்கு புத்தாண்டு கொள்கை குறித்து விளக்கமளிக்கையில் லிம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.