NATIONAL

வின்வெளித் துறை முதலீட்டாளர்கள் விருப்பத் தேர்வாக சிலாங்கூர் திகழ்கிறது!

22 ஜனவரி 2020, 2:45 PM
வின்வெளித் துறை முதலீட்டாளர்கள்  விருப்பத் தேர்வாக சிலாங்கூர் திகழ்கிறது!

ஷா ஆலம், ஜன.23-

நாட்டின் வின்வெளி தொழில்துறையின் 70 விழுக்காடு முதலீட்டை சிலாங்கூர் கொண்டிருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ர் அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார். பிரசித்தி பெற்ற ஏர்பஸ் தயாரிப்பு நிறுவனம் அதன் தொழிற்சாலையை சிலாங்கூரில் அமைப்பது குறித்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வின்வெளித் துறையில் சிலாங்கூர் 2016ஆம் ஆண்டு 60 விழுக்காடு ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில் அது 2019ஆம் ஆண்டில் 65 விழுக்காடாக அதிகரித்ததாக அவர் சொன்னார். விரைவில் வின்வெளித் துறையை சிலாங்கூர் ஆதிக்கம் செலுத்து என்று ஆர்டிஎமுடனான பொருளாதாரக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமிருடின் தெரிவித்தார்.

முதலீட்டாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு மாறிச் செல்வதாகக் கூறப்படுவது குறித்து பேசுகையில், உள்நாட்டு மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்களின் விருப்பத் தேர்வு மாநிலமாக சிலாங்கூர் திகழ்வதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.