NATIONAL

புதிய நாடாளுமன்ற கட்டடம் மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்

16 ஜனவரி 2020, 2:49 AM
புதிய நாடாளுமன்ற கட்டடம் மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்

கோலாலம்பூர், ஜன.16-

2015ஆம் ஆண்டு முதல் தரம் உயர்த்தப்பட்டு வரும் நாடாளுமன்ற 3பி கட்டடம் இவ்வாண்டு மார்ச் மாதம் செயல்படத் தொடங்கும்.

இக்கட்டடம் அலுவலக அறைகள், நூலகம், உடல் பயிற்சி மையம், நீராவிக் குளியல் அறை, விவாத அறை, சந்திப்புக்கூட்ட அறை, உணவகம்  மற்றும் தொழுகை அறை போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும்.

இந்த வசதிகள் யாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் துடிப்பாக பணியாற்றவும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிகளவில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் எனத் தாம் நம்புவதாக மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிஃப் முகமது யூசோப் கூறினார்.

“இந்த கட்டடம் செயல்படத் தொடங்கியதுடன் நாடாளுமன்ற கூட்டட் தொடர்களுக்கு வருகைப் புரியும் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு விவாதங்கள் தொடர்ந்து நடைபெறும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.