NATIONAL

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! - அமைச்சர் ஜூரைடா கமாருடின்

15 ஜனவரி 2020, 11:53 AM
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! - அமைச்சர் ஜூரைடா கமாருடின்

கோலாலம்பூர், ஜன.15-

பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாளாகும். சமய பேதமில்லாமல் அனைத்து தமிழர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

இது தமிழர்கள் குறிப்பாக மலேசிய தமிழர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் ஒரு நன்னாளாகும் என்று அவர் மேலும் கூறினார்.

“தங்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தை மேம்படுத்திய இயற்கைக்கு விவசாயிகள் நன்றி கூறும் திருநாளாகவும் இப்பொங்கல் கொண்டாடப்படுகிறது” என்றார்.

இப்பொங்கலில் சமைக்கப்படும் இனிப்பு பொங்கலானது விவசாயிகள் வாழ்க்கையின் இனிமையைச் சித்தரிப்பதாகவும் கருதப்படுகிறது.

“உண்மையில், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இத்திருநாளை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்” என்று அமைச்சர் ஜூரைடா வலியுறுத்தினார்.

“அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஜூரைடா தெரிவித்துக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.