RENCANA PILIHAN

சிலாங்கூர் உணவு வங்கி திட்டம்: விரைவில் அமல்படுத்தப்படும்!

15 ஜனவரி 2020, 4:18 AM
சிலாங்கூர் உணவு வங்கி திட்டம்: விரைவில் அமல்படுத்தப்படும்!

ஷா ஆலம், ஜனவரி 15:

வெகு விரைவில் தொடங்கவிருக்கும் சிலாங்கூர் உணவு வங்கி திட்டத்தின் மக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கை முடியும் தருவாயில் இருப்பதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நிரந்தர செயற்குழு ஆட்சிக் குழு கூறியது. உதவி பெறுநர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் பெயர்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவது போன்ற பலவீனங்களைக் களைவதற்காக இந்தக கணக்கெடுப்பு நடவடிக்கை அவசியமாகிறது என்று ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா தால்ஹா தெரிவித்தார்.

இந்தப் பட்டியலை சரிப்பார்பதன் வழி இந்த உதவித் திட்டத்திற்கு தகுதி பெறும் எவரும் விடுபவது தவிர்க்கப்படும் என்றார் அவர்.

“உதாரணமாக, சமூக நல இலாகாவின் உதவியைப் பெறும் ஒருவர் மற்றொரு அமைப்பின் உதவியையும் பெறுவது” என்று சிலாங்கூர்கினியிடம் அவர் விளக்கமளித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.