SELANGOR

மாநில பொதுச் சேவை பணியாளர்கள்: அடைவு நிலையில் மன நிறைவு கொள்ளாமல் தொடர்ந்து பாடுபட வேண்டும்!

14 ஜனவரி 2020, 7:10 AM
மாநில பொதுச் சேவை பணியாளர்கள்: அடைவு நிலையில் மன நிறைவு கொள்ளாமல் தொடர்ந்து பாடுபட வேண்டும்!

கோம்பாக், ஜன.13-

நடப்பு அடைவு நிலையில் சிலாங்கூர் பொது சேவை பணியாளர்கள் மன நிறைவுக் கொள்ளக் கூடாது என்று நினைவுறுத்தப்பட்டனர்.. “மாநிலத்தின் பொதுச் சேவை பிரிவினர் எப்போதும் தற்போதைய அடைவு நிலையில் மன நிறைவு கொள்ளாமல், மேலும் சிறப்பான அடைவு நிலையை நோக்கி செயல்பட வேண்டும்” என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“சிலாங்கூர் மாநில பொதுச் சேவை பணியாளர்கள் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதோடு மதிக்கப்பட வேண்டும். அந்நிய நாடுகளும் இம்மாநில பணியாளர்களைக் கண்டு திகைக்க வேண்டும்: என்றார்.

“இது தவிர்த்து, உலகளாவிய நிலையிலும் இம்மாநில பணியாளர்கள் வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும்” என்று கோம்பாக்கில் சிலாங்கூர் பொது நூலகத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரையில் அமிருடின் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.