SELANGOR

சட்டமன்ற உறுப்பினர் பணியை அடிஃப் ஷான் தொடரலாம்! - மந்திரி பெசார்

14 ஜனவரி 2020, 6:25 AM
சட்டமன்ற உறுப்பினர் பணியை அடிஃப் ஷான் தொடரலாம்! - மந்திரி பெசார்

கோல லங்காட், ஜன.13-

விசாரணை நிறைவுறும் வரை டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிஃப் ஷான் அப்துல்லா தனது பணிகளைத் தொடரலாம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று கூறியது போல், தவறு செய்பவர் எவராக இருப்பினும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டே ஆக வேண்டும் என்று அவர் சொன்னார்.

குற்றஞ்சாட்டப்பவர்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாதவரை அவர்கள் நிரபராதிகளாகவே கருதுவது தமது தரப்பு கொள்கையாகும். எனவே, சம்பந்தப்பட்ட விசாரணை சமூகமாக நடைபெறும் எனத் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

இன்றைய நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.எனவே அவர் தன்னை நிரபராது என்று சட்டத்தின் முன் நிரூபிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவர் தனது பணிகளைத் தொடரலாம். எனினும், பங்காளி கட்சியான பெர்சத்துவின் கருத்துக்காகவும் தாம் காத்திருப்பதாக அமிருடின் தெரிவித்தார். முன்னதாக, குற்றவியல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் கட்சி உறுப்பினர் மீது மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சி நடவடிக்கை எடுக்கும் அக்கட்சியின் தலைவருமான பிரதமர் டாக்டர் மகாதீர் நேற்று தெரிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.