PBT

வரியைச் செலுத்தி பரிசைப் பெறுவோம் இயக்கத்தில் 11,573 பேர் பங்கேற்றனர்!

9 ஜனவரி 2020, 4:26 AM
வரியைச் செலுத்தி பரிசைப் பெறுவோம் இயக்கத்தில் 11,573 பேர் பங்கேற்றனர்!

ஷா ஆலம், ஜன.9-

கோல லங்காட் மாவட்ட மற்றும் நில அலுவலகம் கடந்தாண்டில் மேற்கொண்ட நில வரியைச் செலுத்தி பரிசைப் பெறுவோம் என்ற இயக்கத்திற்கு சொத்துடைமை உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்தாண்டில் மொத்தம் 11,573 பேர் இதில் பங்கேற்றனர். வரிக் கட்டணம் செலுத்தும் முதலாவது கால கட்டம் ஜனவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரையிலும் மற்றும் அதன் இரண்டாவது கட்டம் ஏப்ரல் 16 தொடங்கி மே 29ஆம் தேதி வரை என்று அவ்வியக்கம் நடைபெற்றதாக மாவட்ட அதிகாரி முகமது ஜுஸ்னி ஹாஷிம் கூறினார்.

இந்த இயக்கமானது வரி செலுத்துவோர் கால தாமதமின்றி வரியைச் செலுத்துவதை ஊக்குவித்தோடு வரி வசூலிப்ப்ய் தரத்தை உயர்த்துவதே ஆகும் என்று அவர் விவரித்தார். குறிப்பிட்ட தவணைக்குள் வரியைச் செலுத்தி தங்கள் கடமையை நிறைவேற்றுவோருக்கு வழங்கப்பட்ட ஓர் அங்கீகாரமாக இந்தப் பரிசுத் திட்டம் அமைந்தது என்றார் அவர்.

இவ்வாண்டும், இந்த இயக்கத்தின் இரண்டாவது கட்டம் தொடர்கிறது. இத்திட்டத்தில் பங்கேற்போருக்கு மோட்டார் சைக்கிள் உட்பட 50 கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படவுள்ளன,

இந்நவடிக்கையானது, அதிக எண்ணிக்கையிலானோர் வரிச் செலுத்துவதை ஊக்குவித்ததோடு செலுத்தப்படாத வரியின் தொகையைக் குறைக்கவும் உதவியது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.