PBT

கோல சிலாங்கூரின் ‘வெளிர் நீலத் துளிகள்’ சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் புதிய அம்சம்

7 ஜனவரி 2020, 8:21 AM
கோல சிலாங்கூரின் ‘வெளிர் நீலத் துளிகள்’  சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் புதிய அம்சம்

ஷா ஆலம், ஜன.7-

2020 மலேசியாஅவிற்கு வருகை புரியும் ஆண்டில் சுற்றுப் பயணிகளின் கவனத்தை கோல சிலாங்கூரில் புதிதாக உருவாகியுள்ள “வெளிர் நீலத் துளிகள்” ஈர்க்கும்.

ஃபிதோபிளான்க்டோன் எனும் கடலின் மேல் மட்டத்தில் மிதக்கும் ஒரு வகை கடல் தாவரம் கடல் நீரில் பிராண வாயுவின் விளைவாக வெளிரி நீல ஒளியை வெளிப்படுத்துவது கண்களுக்கு விருந்தளிக்கும் ஓர் அரிய காட்சியாகும்.

இந்தத் தாவரமானது கோல சிலாங்கூர் மாவட்டத்தின் அழகை மெருகூட்டுவதோடு சுற்றுப் பயணிகளையும் கவரும் ஓர் அம்சமாக இருக்கும் என்று கோல சிலாங்கூர் மாவட்ட மன்ற தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார். 2020ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை அளிக்கும் ஆண்டை வெற்றி பெறச் செய்ய துன் டாக்டர் மகாதீர் முகமது விடுத்துள்ள வேண்டுகோளை தாம் வரவேற்பதாக அவர் சொன்னார்.

இந்த சுற்றுலா ஆண்டில் கோல சிலாங்கூர் மக்கள் சுற்றுப் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதோடு தங்கள் வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ளவர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.