கிள்ளான், டிச.31-
கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பி40 பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்ற சேவை மையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் மக்கள் நலச் சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் இச்சந்தையில் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் வசிக்கும் பி40 பிரிவினரின் அன்றாடத் தேவைகளுக்கான அடிப்படை பொருட்கள் விற்கப்படும் என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாபு தெரிவித்தார்.
தொடக்க கட்டமாக அரசி. சமையல் எண்ணெய், கோழி. முட்டை, பால், சார்டின், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றை விற்க தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட பொருட்களை விற்க தேர்ந்தெடுக்க வணிகர்களை தாங்கள் அழைக்கவிருப்பதாக அவர் கூறினார்.
“இச்சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை, இதர இடங்களின் விற்கப்படும் பொருட்களின் விலையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்” என்று தற்காப்பு அமைச்சருமான மாட் சாபு தெரிவித்தார்.


