ஷா ஆலம், டிச.26-
புத்தாண்டில் ஜனவர் 19 மற்றும் 19ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் ‘சிலாங்கூர் ஆசியா சேலஞ்’ போட்டியில் ஏஎன்எஃப் லோஜிஸ்டிக் நிறுவனம் அதன் வியூகப் பங்காளியாக முதன் முறையாக இணைந்திருப்பது இம்மாநிலம் வெற்றி பெறுவதற்கான ஆதரவும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் ஆதரவுடன், உள்நாட்டு லீக் போட்டியில் மட்டுமல்லாது, அனைத்துலக அரங்கிலும் அதிரடி படைக்கும் ஒரு குழுவாக ‘ரெட் ஜயண்ட்’ மீண்டும் திகழும் என்று ஏஎன்எஃப் லோஜிஸ்டிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மியோர் முகமது ஃபாட்ஸ்லான் கூறினார். பருவ ஆட்டத்திற்கு முந்திய போட்டியானது தங்கள் நிறுவனத்தின் கார்கோ சேவைகளும் ஆகாய மார்க்கமாக அதிவேகமாக செய்யும் விநியோகச் சேவைகளும் பிரபலமடையும் என்றார் அவர்.
“சிலாங்கூர் காற்பந்தாட்டக் குழுவின் நிரந்தர ஆதரவாளர் என்ற முறையில், சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷாவின் தலைமைத்துவத்தில் மற்றும் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜோஹான் கமால் ஹமிடோன் நிர்வாகத்திலும் இக்குழு மேம்பாடு காணும்” என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்தப் பிரசித்தி பெற்ற போட்டியில் ஆசிய வட்டாரத்தில் முதன் முறையாக இந்தப் போட்டியில் ஆதரவு நிறுவனமாக தாங்கள் இயங்குவதற்கு வாய்ப்பளித்த சிலாங்கூர் காற்பந்து சங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.


