ஷா ஆலம், டிச.24-
மாநில அரசு பணியாளர்களுக்கான 2019ஆம் ஆண்டின் சிறப்பு நிதியுதவி திட்டத்தின் எஞ்சிய தொகை, 500 ரிங்கிட் முதல் 2 மாத ஊதியம், இன்று பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மாநிலத்தின் அனைத்து அரசு பணியாளர்களுக்கு அவர்களின் அடைவு நிலை குறியீட்டு (கேபிஐ) அடிப்படையில் எஞ்சிய நிதியுதவி வழங்கப்படுகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“2019ஆம் ஆண்டு சிறப்பு நிதியுதவி இன்று மாநில அரசின் அனைத்து பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
கடந்த நோன்பு திருநாளின் போது அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்பட்ட வேளையில், அவர்களின் கேபிஐ குறியீட்டைப் பொறுத்து எஞ்சிய தொகை இன்று வழங்கப்படுகிறது என்று அவர் விவரித்தார். அதேவேளையில், 2019ஆம் ஆண்டு சிறந்த அரசு நிர்வாக சேவை விருதை வென்ற பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் மற்றும் சிலாங்கூர் பொது சேவை ஆணையம் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்கும் மந்திரி பெசார் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.


