SELANGOR

சகோதரத்துவத்தை வலுப்படுத்துங்கள்! - மந்திரி பெசார்

25 டிசம்பர் 2019, 1:31 PM
சகோதரத்துவத்தை வலுப்படுத்துங்கள்! - மந்திரி பெசார்

ஷா ஆலம், டிச.25-

குடும்பத்தினர், உறவினர் மற்றும் அண்டை அயலாருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் மகிழ்ந்திருக்கவும் ஒரு தடமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மலேசிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்தப் புரிந்துணர்வே நாடு 62ஆம் ஆண்டுகளுக்காக மேலாக வெற்றி நடைபோடுவதற்கும் மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்குமான காரணமாகும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“அண்மையில், சிலாங்கூர் ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் ஷரஃபுடின் இட் ரிஸ் ஷா தமது 74ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது கூறியது போல், இந்த அமைதியை நாம் தொடர்ந்து தற்காக்க வேண்டும்” என்றார் அவர்.

“இந்த அடிப்படையில். கிறிஸ்துமஸ் கொண்டாடும் சீனர், இந்தியர் மற்றும் சபா, சரவாக் பூமிபுத்ராக்கள் என அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.

அதேவேளையில், கிறிஸ்துமஸ் கொண்டாடும் இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ் அன்பர்களுக்கும் அவர் வாழ்த்து கூறினார்.

அமைதி, சகோதரத்துவம் மற்றும் அன்பை வலியுறுத்தும் இயேசு கிறிஸ்துவின் கொள்கையையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.