ஷா ஆலம், டிச.18-
டாருல் ஏசான் இலவச குடிநீர் திட்டத்திற்கு இதுவரை மொத்தம் 83,382 விண்ணப்பங்களை மட்டுமே ஆயர் சிலாங்கூர் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த எண்ணிக்கையானது மாநில அரசு வகுத்த இலக்கைக் காட்டிலும் மிகவும் குறைவாகும் என்று அதன் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார்.
இந்த எண்ணிக்கையில் 46.941 விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையான விவரங்களைக் கொண்டுள்ளன. இதர 27,415 விண்ணப்பங்களில் விவரங்கள் முழுமையாக இ;ல்லாத காரணத்தால் அவை இன்னும் பரிசீலிக்கப்படாமல் உள்ளன என்றார் அவர்.
இதனிடையே, எஞ்சிய 9,026 விண்ணப்பதாரர்கள் விவரங்களைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று இங்குள்ள ஜாலான் பந்தாய் பாருவில் உள்ள அலுவலகத்தில் சிலாங்கூர் கினியிடம் அப்துல் ஹாலிம் தெரிவித்தார்.
வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிந்துக் கொள்ளும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


