ஷா ஆலம், டிச.18-
இவ்வாண்டு நவம்பர் மாதம் வரையில் சிலாங்கூர் 1.066 பில்லியன் ரிங்கிட் பிரிமியத்தை வசூலித்துள்ளது.
இந்தத் தொகை இவ்வாண்டுக்கு விதிக்கப்பட்ட இலக்கான 1 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“நாங்கள் வகுத்த இலக்கைக் காட்டலும் அதிகளவிலான பிரிமியத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது” என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர், ஷா ஆலம், செக்ஸன் 7இல் உள்ள அதிகாரப்பூர்வ மந்திரி பெசார் இல்லத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற 2020 பட்ஜெட் அங்கீகார நிகழ்ச்சியில் மந்திரி பெசார் இந்த விவரங்களை அவர் வெளியிட்டார்.
நிலத்தை உட்படுத்திய பிரிமியம் தொகை வசூலில் அடையப் பெற்றுள்ள இந்த வெற்றிக்கு அனைத்து தரப்பினரின் கடுமையான உழைப்பும் காரணம் என்று அமிருடின் ஷாரி கூறினார்.


