ஷா ஆலம், டிச.18-
ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய மாநகராட்சி மன்றங்களுக்குப் பின்னர் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் இன்று மாநகராட்சி மன்றமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்துடன் (எம்பிஎஸ்ஜே) கோல லங்காட் மாவட்ட மன்றம் நகராண்மைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
கோல லங்காட் மாவட்ட மன்றம் நகராண்மைக் கழகமாக உயர்த்தப்படுவதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கியதாக நேற்று உறுதிப்பட்டது என்றார் அவர்.
அதேவேளையில், நேற்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் மாநகராட்சி மன்றமாகத் தரம் உயர்த்தப்பட்ட தகவலை நேற்று என்னிடம் தெரிவித்தார் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் அதிகாரப்பூர்வ மந்திரி பெசார் இல்லத்தில் நடைபெற்ற அங்கீகார நிகழ்ச்சியில் மந்திரி பெசார் இத்தகவல்களை வெளியிட்டார்.


