அம்பாங், டிச.17-
அண்டை அயலார் மத்தியில் நட்புறவை வலுவூட்டும் நோக்கத்தில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட் சமூக மையத் திட்டத்தில் தாமான் டாகாங் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர்.
இத்திட்டமானது 2030 மேம்பட்ட சமூக மற்றும் தேசிய கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் பி40 தரப்பினர் ஆரோக்கியமான சமூக சூழலை ஏற்படுத்திக் கொள்ள உதவும் என்றும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.
அண்டை அயலாருடனான உறவை வலுப்படுத்தும் இத்திட்டத்திற்கு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகமும் முழு ஒத்துழைப்பு நல்கியதாக அவர் குறிப்பிட்டார்.
நகர்ப்புற மலேசியா ஏற்பாட்டிலான சமூக மையத் திட்டமானது முக்கியமாக நகர்புறத்தில் வாழும் பி40 சமூகத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.
கொண்டேனாவைப் பயன்படுத்தி வாசிப்பு அறை, மினி நூலகம் போன்ற பல பகுதிகளைக் கொண்ட ஒரு மையமாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார்.


