உலு சிலாங்கூர், டிச.17-
புக்கிட் பெருந்தோங், தாமான் பூங்கா ராயா மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் 100 ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஸோன்@21க்கான 2020 மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் பள்ளி உபகரணப் பொருட்கள் மற்றும் பள்ளிப் பைகள் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் பெசோனா கிளப்பின் ஒத்துழைப்புடன் ஸோன்@21க்கான மன்ற உறுப்பினர், உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் மற்றும் ஸோன்@21 இளைஞர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் தாமான் பூங்கா ராயா தேசிய பள்ளி 1 & 2 மாணவர்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை எம்டிஎச் எஸ் மன்ற உறுப்பினர் கைருல் அஸாரி சாவுட் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் மேலும் முனைப்போடு கல்வி கற்கவும் மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் செல்லவும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று கைருல் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், இப்பிள்ளைகளின் பள்ளித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதிச் சுமையை இத்திட்டம் குறைக்கும் என்றும் அவர் சொன்னார்.


