ஷா ஆலம், டிச.17-
2025ஆம் ஆண்டு வாக்கில் விவேக மாநிலமாக உருவாகும் சிலாங்கூரின் இலக்கை மதிப்பிடும் அளவுகோல்களில் மாநிலத்தின் மிகச் சிறந்த இலக்கிய படைப்பாற்றலும் ஒன்றாகும்.
பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்துறை 4.0 புரட்சி தொழில்நுட்ப மேம்பாட்டை ஆகியவற்றை மட்டும் கொண்டு விவேக மாநில கொள்கையை மதிப்பிடக் கூடாது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“ஏனெனில், மலேசியாவில் ஒரு சிறந்த இலக்கிய படைப்பு உருவாகும்போது, அண்டை நாடுகளான இந்தோனேசியா, மனிலா மற்றும் பேங்காக் போன்றவற்றுடம் தயக்கமின்றி ஒப்பிடலாம்” என்றார் அவர்.
இது போன்ற படைப்பாற்றல் அம்சங்கள் இளைஞர்களை ஃபேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் இருந்து சற்று மீட்டெடுக்கலாம் என்றார் அவர்.
“எனவே, எதிர்காலத்தில், பொருளாதாரம் தவிர்த்து, கலாச்சாரமும் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுகோலாக உருவெடுக்கும்” என்றும் அவர் சொன்னார்.
இங்குள்ள எஸ்ஏசிசி மாலில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு சிலாங்கூர் இலக்கிய பரிசளிப்பு விழாவில் அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.


