கிள்ளான், டிசம்பர் 15:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களுக்கு நன்மை பயக்கும் பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, எந்த தரப்பினரும் அதில் விடுபடாமல் மாநில மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார். மாநில அரசாங்கத்தின் 'சிலாங்கூர் ஒன்றாக முன்னேறுவோம்' என்ற சுலோகத்தின் அடிப்படையில் சிறந்த ஒரு மாநிலமாக உருவெடுத்து, மாநில மக்கள் நல்வாழ்வு பெற முடியும் என்று அவர் விவரித்தார்.
" கிருஸ்துமஸ் பண்டிகையில் நடக்கும் அதிசயம் போல மாநில அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கவில்லை. சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டுள்ளோம். சிலாங்கூர் மாற்றுத்திறனாளி நடவடிக்கை மன்றம், சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் திட்டம் அல்லது அனிஸ் மற்றும் முத்த குடிமக்கள் திட்டம் மொத்தம் ரிம 20 மில்லியனை மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. பசுமை தன்னார்வளர்கள் அல்லது ' கிரீன் வொலன்ரிஸம்' மற்றும் ஃபிரண்ஸ் ஓப் ரிவர்' ஆகியவை இதில் அடங்கும், " என்று அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
[caption id="attachment_372109" align="alignleft" width="500"]
Dato' Seri Amiruddin Shari menyampaikan sumbangan kepada wakil rumah ibadat bukan islam (Kristian) ketika Sambutan Perayaan Hari Krismas Peringkat Selangor 2019 di GM Klang, Klang pada 14 Disember 2019. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI[/caption]


