பூச்சோங், டிசம்பர் 14:
சிலாங்கூர் மாநிலத்தை வழி நடத்தும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து வேற்றுமை உணர்வுகளை தவிர்த்து, அனைத்து இன மக்களுக்கும் சரிசமமாக சேவை வழங்கி வருகிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி நினைவு படுத்தினார். கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய வெற்றிக்கு பாக்காத்தான் அரசாங்கம் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என நினைவு கூர்ந்தார்.
" பாக்காத்தான் அனைத்து இனங்களுக்கும் தொடர்ந்து பாடுபடும். மக்களின் சமூக நலன், சுகாதாரம், மகளிர் நலன், சிறுவர்கள் மற்றும் முத்த குடிமக்கள் ஆகிய எல்லா தரப்பினரும் பயன் பெறும் வகையில் புதிய திட்டங்களை மாநில அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. மாநிலத்தின் வளப்பமான சூழ்நிலை மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வேளையில், அதை மீண்டும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே பாக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் எண்ணம். மக்களின் பேராதரவு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி பாக்காத்தான் மக்களுக்கு 14-வது பொதுத் தேர்தலில் வாக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி வகுக்கும்," என்று சின் மிங் சீனப்பள்ளியில் கின்ராரா ஜனநாயக செயல்கட்சியின் விருந்து நிகழ்ச்சியின் போது இவ்வாறு அமிரூடின் ஷாரி பேசினார்.
[caption id="attachment_371879" align="alignleft" width="500"]
Dato' Seri Amirudin Shari berucap sempena Majlis Makan Malam Bersama Rakyat Selangor Anjuran DAP Kinrara di SJKC Sin Ming, Puchong pada 13 Disember 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI[/caption]
சுமார் 1000 பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஜனநாயக செயல்கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங் மற்றும் கின்ராரா சட்ட மன்ற உறுப்பினர் எங் ஸீ ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


