PBT

வணிக உரிமத்தை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் !!

13 டிசம்பர் 2019, 4:06 AM
வணிக உரிமத்தை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் !!

ஷா ஆலம், டிசம்பர் 13:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் கீழ் இயங்கி வரும் 10,560 வணிக உரிமம் பெற்ற வணிகர்கள் ஜனவரி 1-க்குள் தங்களது உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி மன்றத்தின் தொழில்முறை மற்றும் பொது தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அமாட் தெரிவித்தார். அப்படி புதுப்பிக்க தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்று நினைவு படுத்தினார்.

இதற்கு முன் அறிவிக்கப்பட்டது போல் வணிக உரிமம் பெற்றுள்ள வணிகர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே நினைவுட்டும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆகவே, வணிக உரிமங்களை கீழ்கண்ட அலுவலகங்களில் புதுப்பிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்:-

தலைமை அலுவலகம்:

Kaunter Utama, Tingkat G, Wisma MBSA, Kaunter Jabatan OSC, Tingkat LG, Wisma MBSA, Kaunter Jabatan Pelesenan, Tingkat 13, Wisma MBSA.

கிளை அலுவலகம்:

Cawangan Sungai Buloh, Seksyen U20, Pejabat

Cawangan Kota Kemuning, Seksyen 31 dan Pejabat

Cawangan Setia Alam, Seksyen U13, Shah Alam.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.