NATIONAL

கட்சியில் இருந்து நீக்கினாலும், கெஅடிலானின் கொள்கைக்காக எதிர் கொள்ள தயாராக உள்ளோம்- அஸ்மின் & ஜூரைடா உறுதி !!!

8 டிசம்பர் 2019, 4:41 PM
கட்சியில் இருந்து நீக்கினாலும், கெஅடிலானின் கொள்கைக்காக எதிர் கொள்ள தயாராக உள்ளோம்- அஸ்மின் & ஜூரைடா உறுதி !!!
கட்சியில் இருந்து நீக்கினாலும், கெஅடிலானின் கொள்கைக்காக எதிர் கொள்ள தயாராக உள்ளோம்- அஸ்மின் & ஜூரைடா உறுதி !!!

கோலா லம்பூர், டிசம்பர் 9:

கட்சியின் போராட்ட சித்தாந்தத்தை தற்காற்க கெஅடிலான் கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர் ஜூரைடா கமாரூடின் தங்களை கட்சியில் இருந்து நீக்கினாலும் எதிர் கொள்ள தயாராக உள்ளோம் என்று சூளுரைத்தனர். கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வெளிப்படையாக குறைகளை எடுத்துக் கூறும் ஜூரைடா தம்மை கட்சியில் இருந்து நீக்கினால், அதை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.

" நாங்கள் கட்சியில் இருந்து நீக்கினால், கட்சியின் நன்மைக்காக நானும் அஸ்மினும் தயாராக உள்ளோம்.கெஅடிலான் கட்சியின் எதிர் காலத்திற்காக எங்களை பலிகடா ஆக தயாராகி விட்டோம். கட்சியியை சரியான பாதையில் கொண்டு செல்லும் முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம். 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற ஆணவத்தில் அன்வார் தற்போது இருக்கிறார். ஆனால், கட்சியின் நிர்வாகம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. யாரைக் குறை சொல்வது?," என்று ரெனோஸோன் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் நடைபெற்ற  2030 இலக்கு நல்லெண்ண விருந்து நிகழ்ச்சியின் போது ஸுரைடா கமாரூடின் இவ்வாறு பேசினார்.

[caption id="attachment_370666" align="alignleft" width="500"] Timbalan Presiden KEADILAN, Dato' Seri Mohamed Azmin Ali bergambar bersama perwakilan pada Majlis Makan Malam Wawasan Kemakmuran Bersama di Hotel Renaissance Kuala Lumpur pada November 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI[/caption]

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.