NATIONAL

காவல்துறை: இனங்களிடையே சச்சரவு என்ற ஒலிப்பதிவு பொய்யான செய்தி ஆகும் !!!

6 டிசம்பர் 2019, 6:56 AM
காவல்துறை: இனங்களிடையே சச்சரவு என்ற ஒலிப்பதிவு பொய்யான செய்தி ஆகும் !!!

கோலா லம்பூர், டிசம்பர் 6:

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இனக் கலவரம் நடக்கப் போகிறது என்று சமூக வலைதளங்களில்  வெளியாகிய ஒலிப்பதிவுகளில் உண்மையில்லை என்று தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சூர் உறுதிப் படுத்தினார். இந்த தவறான  ஒலிப்பதிவுகள் பொறுப்பற்ற சில தரப்பினரால் நாட்டில் இனரீதியான பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது என அவர் விளக்கினார்.

" ஆகவே, பொது மக்கள் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். இனம் மற்றும் மதம் ஆகியவை சம்பந்தப்பட்ட தகவல்களை பரப்பி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். பொது மக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளை உறுதிப் படுத்த காவல்துறை அணுக வேண்டும்," என்று நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் மஸ்லான் மன்சூர் தெரிவித்தார்.

பொய்யான தகவல்களை வெளியிடுவது அல்லது பகிர்வது ஆகிய செயல்கள் சட்டப்படி குற்றம், காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும்கூறினார். இந்த நடவடிக்கை இனங்களிடையே நல்லிணக்கத்தையும் மற்றும் நாட்டின் நிலைத்தன்மையும் பாதிக்கும் என அச்சம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.