NATIONAL

2018 இறுதி வரையில் கேடிஎம்பி ரிம.3 பில்லியன் நஷ்டம்

2 டிசம்பர் 2019, 7:25 AM
2018 இறுதி வரையில் கேடிஎம்பி ரிம.3 பில்லியன் நஷ்டம்

கோலாலம்பூர், டிச.2-

மலேசிய இரயில் நிறுவனமான கேடிஎம்பி 2018ஆம் ஆண்டு இறுதி வரையில் 2.829 பில்லியன் நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக 2018ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வாளர் அறிக்கையின் இரண்டாம் பாகம் தெரிவித்தது. நிறுவன நடவடிக்கைகள் மற்றும் சொத்துடைமை பயனீடு குறித்து அந்நிறுவனம் இன்னும் சுதந்திரமாக முடிவெடுக்க இயலாததே இந்த நஷ்டத்திற்கு காரணம் என்று கணக்காய்வாளர் அறிக்கை கண்டறிந்துள்ளது.

அது நிதியமைச்சு, போக்குவரத்து அம்ஃஐச்சு, இரயில் சொத்துடைமை கழகம் மற்றும் தரைப் போக்குவரத்து அமைப்பு ஆகிய நான்கு அமைப்புகளுடன் இன்னும் கட்டுண்டு கிடக்கிறது என்று அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது. டிக்கெட் வருமானத்தை மட்டுமே சார்ந்திருக்கும் கேடிஎம்பியின் நிதிநிலை நிலையாக இல்லாததற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது என்று அது கூறியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.